பெரம்பலூரில் காவல் துறையினருக்கு மன அழுத்தம் மற்றும் நிறை வாழ்வுக்கான பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பங்கேற்றார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில், மாவட்ட காவல் துறையினருக்கு மன அழுத்தத்தை கையாளுவது மற்றும் கரோனா காலத்தில் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றியும், உடல் நலத்தை பாதுகாத்தல் பற்றியும் பயிற்சி வழங்கப்பட்டது.
கர்ணம் சகுந்தலா சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் ராஜேந்திரன் கலந்துகொண்டார்.
மேலும் அவர், காவல்துறையினர் மனஅழுத்தங்களை கையாண்டு பணிபுரிவது பற்றியும், மக்களின் மனங்களை புரிந்துகொண்டு அதற்கேற்றார்போல் மக்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றியும், காவல்துறையினர் உடல் நலத்தை சிறப்பாக கையாளுவது தொடர்பாகவும், காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினருடன் பழகும் முறை குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ளப்பட வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் பற்றியும், அன்றாட செயல்பாடுகள் பற்றியும், கரோனா காலத்தில் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றியும் ஆலோசனை வழங்கினார்.