பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஆலத்தூரில் அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடம் மற்றும் விடுதி புதிய கட்டடம் ரூ. 4 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்பு விழா இன்று (ஆகஸ்ட் 14) நடைபெற்றது.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் கட்டடத்தை திறந்து வைத்தார். பெரம்பலூர் ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய விழாவில் மாவட்ட ஆட்சியர் வேதாந்தா, பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.
இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன், பிட்டர், சோலார் வெல்டர், மெக்கானிக் போன்ற பாட வகுப்புகள் நடத்தப்படயிருக்கிறது. தற்போது வரை இங்கு 220 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த கட்டட திறப்பு விழாவில் ஐடிஐ முதல்வர், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் - அரசு தொழில் பயிற்சி பள்ளி
பெரம்பலூர்: ஆலத்தூர் பகுதியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.