ETV Bharat / state

மின் வாரிய ஊழியர் வீட்டில் திருட்டு - மின்சார வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மின் வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் பணம், ஐந்து பவுன் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

மின்சார வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
author img

By

Published : Oct 11, 2019, 6:15 PM IST

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு உட்பட்ட SKC நகரில் வசித்து வருபவர் பொன்னுச்சாமி. இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அலுவலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பணி நிமித்தமாக பொன்னுச்சாமி திருச்சிக்குச் சென்றுள்ளார்.

மின் வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

இதனை நோட்டமிட்ட திருடர்கள் இவரது மனைவி அருகில் உள்ள கோயிலுக்கு சென்றபோது வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தையும், ஐந்து பவுன் தங்க நகைகளையும் திருடிச் சென்றுவிட்டனர். கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய அவரது மனைவி வீட்டில் கொள்ளை நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையால் நாய்களுக்கு வந்த சோதனை!

Intro:பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்சம் பணம் மற்றும் 5பவுன் நகை திருட்டு.போலீசார் விசாரணை .Body:பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு உட்பட்ட SKC நகரில் வசித்து வருபவர் பொன்னுச்சாமி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அலுவலராக வேலை செய்து வருகிறார். இவர் பணி நிமத்தமாக திருச்சி சென்று விட்டார்.
இவரது மனைவி அருகில் உள்ள கோவிலுக்கு சென்ற போது அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்ச ரூபாய் பணமும், பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகையும் திருடிச் சென்று விட்டனர்.
இதனையடுத்து பெரம்பலூர் போலீசார் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.