பெரம்பலூர் மாவட்டம் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. அவரது கணவர் சக்திவேல். இவர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார் .
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அகிலாவிற்கும் அவரது கணவர் சக்திவேலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மஞ்சுளா, அவரது கணவரின் வீட்டு அருகிலுள்ள உறவினரின் விழாவிற்குச் சென்றபோது தன்னுடைய கணவர் சக்திவேல், அவரது சகோதரர்கள், உறவினர்கள் மஞ்சுளாவை தகாத வார்த்தையில் திட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மஞ்சுளா தனது கணவரை சேர்த்து வைக்கக் கோரியும், கொலைவெறி தாக்குதல் நடத்தியது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வந்தபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்