வருடந்தோறும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினவிழா கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, இன்று பெரம்பலூர் மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில், உலக மகளிர் தின விழாவை கேக் வெட்டியும், பூங்கொத்து வழங்கியும் வெகுவிமரிசையாக கொண்டாடினார்கள்.
பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணித் தலைவி இராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக பொறுப்பாளர்கள், மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு, 10 கிலோ எடையிலான கேக் வெட்டி ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி அன்பை பரிமாறிக்கொண்டனர்.
மேலும் ஆண்களுக்கு பூங்கொத்துகள் வழங்கியும், கேக் கொடுத்தும் மகிழ்ந்தனர். மகளிர் தினத்தில் மகளிரை போற்றும் வகையில் மாவட்ட கழகத்தின் சார்பில் பெண்கள் அனைவருக்கும் பட்டுப் புடவைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. நலிந்தோருக்கு தையல் மெஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:
உலக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி