பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தில் அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில், சித்திரலேகா சமேத பெருமான் தனி சன்னதியில் விற்றிருக்கிறார். இக்கோயிலில் 12 ராசிகளுக்கு 12 தூண்கள் இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும், இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேர யாகம் நடைபெறும்.
அதன்படி இன்று நடைபெற்ற ஆவணி மாத குபேர யாகத்தில் விக்னேஸ்வர பூஜை, வேதிகா அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகளோடு 96 வகை மூலிகை பொருட்களைப் பயன்படுத்தி யாகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தோடு தீபாராதனை நடைபெற்றது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு குபேர பெருமானை தரிசனம் செய்தனர்.