பெரம்பலூர்: நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவின் ஒருபகுதியாக, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் பயிலும் 4,000 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் தேசியக்கொடி பறப்பதுபோல் 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, நாடெங்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சார்பாக மாணவ-மாணவிகளின் நேற்று (ஆக.13) அக்கல்லூரியின் மைதானத்தில் மனித மூவர்ணக் கொடி உருவாக்கி சாதனை புரிந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மூவர்ண நிறத்தில் ஆடை அணிந்து தேசியக்கொடி பட்டொளி வீசி பறப்பதுபோல் தரையில் அமர்ந்து இருந்தனர்.
குறிப்பாக, அதில் 75 வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா என்ற முத்திரையை உருவாக்கி சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் முத்திரையின் மையத்தில் தேசிய கொடியை ஏந்தி கொண்டு முன்னிலை வகித்தார். இந்த சாதனை நிகழ்வானது ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பெற்றது.
இதையும் படிங்க: வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர்.. 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம்..