நாடு முழுவதும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாட்டில் கடந்த வாரம் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார துறை ) கீதாராணி முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் லட்சுமணன் ஆகியோர் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.
ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, இந்த தடுப்பூசி போடப்படுகிறது. நேற்று(ஜன.17) கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்களப் பணியாளர்கள் யாரும் வரவில்லை. பெரம்பலூர் மாவட்டத்திற்கு 5,100 தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2,550 தடுப்பூசிகள் முன்களப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக போடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என பொதுமக்கள் அஞ்சுவதாக தெரிகிறது.
இதையும் படிங்க: குன்னூரில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் குறைந்துபோன ஆர்வம்