ETV Bharat / state

ஒரு பக்கம் வெள்ளம்... மறுபக்கம் குடிநீர் தட்டுப்பாடு! வீதிக்கு வந்த மக்கள் - Road blockade

பெரம்பலூர்: நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம் புரண்டோடும் சூழலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் அருகே முறையாகக் குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்
author img

By

Published : Aug 16, 2019, 2:27 PM IST

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு மக்கள் வீதிக்குவந்துள்ளனர்.

இது ஒருபுறமிருந்தாலும், தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் அருகே வரகுபாடி கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் வீதிக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இக்கிராமத்துக்கு கடந்த ஒரு மாத காலமக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.

குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு பேருந்தை சிறைப்பிடித்து வைத்தனர். தகவலறிந்த காவல் துறையினர், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையின்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்பட்டு குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Intro:பெரம்பலூர் அருகே 1 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்Body:தமிழகத்தில் கடுமையான வறட்சியின் காரணமாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் நீர் மட்டம் குறைந்ததில் முதலிடத்தில் உள்ளது. மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.
இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் வரகுபாடி கிராமத்தில் 1 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் அரசு பேருந்தை சிறைப்பிடித்து வரகுபாடி_ பெரம்பலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.Conclusion:இந்தப் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.