ஜனவரி 30ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, ஜமாத் அமைப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ. எதிர்ப்பு தெரிவித்து மனிதச் சங்கிலி போராட்டம்