பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமத்தை சேர்ந்த சவிதா. இவர் சிறுகன்பூர் அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்துவருகிறார். தனது சொந்த ஊரான இரூரில் உள்ள பள்ளிக்கு சத்துணவு அமைப்பாளராக பணியிட மாற்றம் செய்யக்கோரி கடந்த மூன்று நாள்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆனால், அதிகாரிகள் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நேற்றிரவு சென்னையில் முதலமைச்சரை சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்றார். அப்போது பெரம்பலூர் அருகே தொழுதூர் சுங்கச்சாவடியில் காவலர்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு அவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தான் ஏற்கனவே கரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தன்னை பழிவாங்குவதாகவும் சவிதா தெரிவித்தார்.
இந்நிலையில் அலுவலர்களின் பேச்சுவார்த்தை அடிப்படையில் அவர் தனது சொந்த ஊருக்கு பணியிட மாறுதல் பெற்றார்.