ETV Bharat / state

நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் - நன்றி தெரிவித்த மாணவர்கள்! - COLLGE STUDENTS

பெரம்பலூர்: குரும்பலூர் அரசு கலைக்கல்லூரியில் நீக்கப்பட்ட இளங்கலை, முதுகலை 11 பாடப்பிரிவுகள் மீண்டும் இந்த கல்வியாண்டு முதல் சேர்க்கப்பட்டதற்கு மாணவர்கள், பேராசிரியர்கள் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மாணவர்கள்
author img

By

Published : Jun 30, 2019, 9:04 AM IST

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி கடந்த ஆண்டு முதல் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக செயல்பட்டு 2019ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரியாக நிலைநிறுத்தப்பட்டது. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதனிடையே, அரசு கல்லூரியாக உயர்த்தப்பட்டதிலிருந்து அரசு அனுமதி பெறாத இளங்கலை பாடப்பிரிவுகளில் இளங்கலை நுண்ணுயிரியல், இளங்கலை சமூகப்பணி, பாடப்பிரிவுகளும் முதுகலைத் தமிழ், ஆங்கிலம், வரலாறு, எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட மொத்தம் 11 பாடப்பிரிவுகள் இந்த கல்வி ஆண்டு முதல் நீக்கப்பட்டு இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை இது குறித்து மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினரைச் சந்தித்தும் கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து, இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுடைய நலன் கருதி நீக்கப்பட்ட 11 பாடப்பிரிவுகள் மீண்டும் சேர்க்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன்
சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன்

இதுகுறித்து, தமிழ்ச்செல்வன் கூறுகையில், 'பெரம்பலூர் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நீக்கப்பட்ட 11 பாடப்பிரிவுகள் மீண்டும் சேர்க்கப்பட்டது' என்று தெரிவித்தார்.

Intro:பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கலைக்கல்லூரியில் நீக்கப்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை 11 பாடப்பிரிவுகள் மீண்டும் இந்த கல்வியாண்டு முதல் சேர்க்கப்பட்டதற்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்

Body:பெரம்பலூர் அருகே குரும்பலூரில் செயல்பட்டு வருகிறது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இக்கல்லூரி கடந்த ஆண்டு முதல் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு இந்த கல்வி ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரி ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது இந்த கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இதனிடையே அரசு கல்லூரியாக உயர்த்தப்பட்ட இதிலிருந்து அரசு அனுமதி பெறாத இளங்கலை பாடப்பிரிவுகளில் bsc microbiology psu சமூகப்பணி உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் முதுகலை தமிழ் ஆங்கிலம் வரலாறு எம்பிஏ எம்சிஏ உள்ளிட்ட மொத்தம் 11 பாடப்பிரிவுகள் இந்த கல்வி ஆண்டு முதல் நீக்கப்பட்டு சேர்க்கை நடைபெற வில்லை இது குறித்து மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர் மேலும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் இதனையடுத்து இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுடைய நலன் கருதி நீக்கப்பட்ட பதினொரு பாடப்பிரிவுகள் மீண்டும் சேர்க்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Conclusion:மேலும் நீக்கப்பட்ட பதினொரு பாடப்பிரிவுகள் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்கள் கல்வி துறையில் சிறந்து விளங்குவதற்காக நீக்கப்பட்ட பதினொரு பாடப்பிரிவுகள் மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் பேட்டி தமிழ்ச்செல்வன் சட்டமன்ற உறுப்பினர் பெரம்பலூர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.