ETV Bharat / state

இயற்கை விவசாயம்: கம்பு சாகுபடியில் அசத்தும் பெரம்பலூர் இளைஞர்

author img

By

Published : Aug 29, 2020, 5:30 PM IST

பெரம்பலூர்: புதுநடுவலூர் கிராமத்தைச் சேரந்த விவசாயி மணி தனது தந்தையுடன் இணைந்து இயற்கை விவசாயத்தின் மூலம் கம்பு சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்டிவருகிறார்.

organic Pearl millet  பெரம்பலூர் மாவட்டச் செய்திகள்  கம்பு விவசாயி  இயற்கை விவசாயி  perambalur youth farming  perambalur district news
இயற்கை விவசாயம்: கம்பு சாகுபடியில் அசத்தும் பெரம்பலூர் இளைஞர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்துவருகின்றனர். பெருவாரியான மானாவாரி நிலங்களைக் கொண்ட இம்மாவட்டத்தில் பருத்தி, மக்கா, சின்ன வெங்காயம் முதலியன பயிரிடப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிகண்டபுரம், மேலப்புலியூர், சிறுவாச்சூர் ஓலைப்பட்டி, எளம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது இயற்கை விவசாயம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

பெரம்பலூர் புதுநடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மணி தனது தந்தையுடன் சேர்ந்து தற்போது இயற்கை விவசாய முறையில் கம்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே தங்களுடைய வயலில் மாப்பிள்ளை சம்பா, யானைக்கவுனி உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகளையும் மிளகாய் உள்ளிட்ட காய்கறி வகைகளையும் இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்ததாக கூறும் அவர், தற்போது கம்பு சாகுபடியில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.

எந்தவித ரசாயண பூச்சி மருந்துகளும் தெளிக்காமல் இயற்கை பூச்சி விரட்டிகளான பஞ்சகவ்யம், மாட்டின் எரு உள்ளிட்டவை பயன்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைப்பதாக மகிழ்வுடன் தெரிவிக்கும் அதேவேளையில், மண்ணை மலடாக்கும் செயற்கை உரங்கைளை பயன்படுத்தாமல் நஞ்சில்லா உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்வதாகவும் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க: வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு கொய்யா விவசாயத்தில் ஈடுபடும் நபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.