தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே கோலமாவு, பொங்கல் பானை, கரும்பு இதற்கு அடுத்தபடியாக பொங்கல் பானையில் கட்டப்படும் மஞ்சள் கொத்து தான் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் செங்குணம் விசுவக்குடி பூஞ்சோலை அன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, "சென்ற வருடம் மஞ்சள் கொத்து ஜோடி 18 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 20 ரூபாய் வரைக்கும் விற்கப்பட உள்ளது. இந்த ஆண்டு விலை தங்களுக்கு நல்லமுறையில் உள்ளது" என்றனர்.
இதையும் படிங்க: கேரள எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ஐஜி நேரில் ஆறுதல்