பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லான். இவர் நூத்தப்பூர் பகுதியிலுள்ள கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டு இன்று (அக்.17) காலை வீடு வந்து பார்க்கும் பொழுது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீட்டினுள்ளே தகரப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி, மோதிரம் செயின் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகளையும் ரூ.10 ஆயிரம் ரொக்க பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, அதனடிப்படையில் கொளத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் 90 ஆயிரம் திருட்டு - காவல் துறையினர் விசாரணை!