பெரம்பலூர் அருகே தீரன் நகர் ரோடு அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம், புதிதாகக் கட்டிய வீட்டில் மனைவி சரோஜா, மகன்கள் வினோத், பாரதிதாசன் உடன் வசித்துவருகிறார்.
புதிய வீட்டில் இன்னும் கதவு பொருத்தப்படாதவில்லை. இந்நிலையில் இரவில் பன்னீர் செல்வம் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த மோதிரம், ஆரம் உள்ளிட்ட 15 சவரன் நகைகளையும், 15 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
காலையில் எழுந்த அவர் தனது வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் திருட்டு!