ETV Bharat / state

வறுமையில் வாடும் சுபாஷ் சந்திர போஸின் படை வீரர்

பெரம்பலூர்: வறுமையில் வாடும் சுதந்திர போராட்ட தியாகி குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.

வறுமையில் வாடும் சுபாஷ் சந்திர போஸின் படை வீரர்
வறுமையில் வாடும் சுபாஷ் சந்திர போஸின் படை வீரர்
author img

By

Published : Jan 24, 2020, 11:51 PM IST

Updated : Jan 25, 2020, 11:38 PM IST

சுதந்திர போராட்ட தியாகி குடியிருக்க வீடின்றி வறுமையில் வாழ்ந்து வரும் நிலை வேதனையை ஏற்படுத்துகிறது. பெரம்பலூர் மாவட்டம் வரவு பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (93) சிறுவயதிலேயே தாய் நாட்டின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர்.

தன் தாய்நாடு மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த காரணத்தினால் அகிம்சை வழியில் போராட மனம் இல்லாததால் தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஐஎன்ஏ படையில் தன்னை இணைத்துக்கொண்டார். பர்மாவில் ஆறு மாத கால பயிற்சி எடுத்துக்கொண்ட இவர் ஆங்கிலேயே படையினருடன் போரிட்டபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை தண்டனையும் பெற்றார்.

வறுமையில் வாடும் சுபாஷ் சந்திர போஸின் படை வீரர்

தாய் நாடு சுதந்திரம் பெறும்வரை நேதாஜி படையில் பணியாற்றி 1954ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்கு வருகை தந்தபோது ரங்கசாமிக்கு ஊரே வரவேற்பு கொடுத்தது. 93 வயதை கடந்தும் தியாகி ரங்கசாமி சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட அரசு விழாக்களில் தவறாமல் நேதாஜி புகைப்படத்துடன் கூடிய பேட்ஜை அணிந்துகொண்டு பங்கேற்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த செல்லம் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட ரங்கசாமிக்கு செல்ல பாப்பு, அழகம்மாள், ஜோதி ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தியாகி ரங்கசாமியின் மனைவி உயிரிழந்த பின்பு, குடியிருந்த வீட்டை பராமரிக்க பணம் இல்லாததால் அதனை இடித்துவிட்டு தற்பொழுது குடியிருக்க வீடு இல்லாமல் தனது மாற்றுத்திறனாளி மகளுடன் வரவுபாடி கிராமத்தில் குடிசை வீட்டில் வாழ்ந்துவருகிறார்.

தனக்கு வீடு வழங்கிட வேண்டுமென்றும், வாரிசுக்கு அரசுப்பணி வேண்டுமென்றும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இவரின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் செவிசாய்க்கவில்லை என அவர் வேதனையோடு தெரிவித்தார். இவருக்கு தற்போது மாநில அரசின் உதவித் தொகை மட்டுமே கிடைக்கிறது.

மத்திய அரசின் உதவித் தொகை கிடைத்தால் வறுமையிலிருந்து மீள முடியுமென வருத்தத்தோடு தெரிவித்தார். மேலும், குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாள்களில் மட்டுமே என்னைப் போன்றோர் கௌரவிக்கப்படுகிறார்கள் எனவும் இதர நாட்களில் அரசு அலுவலர்கள் உள்பட யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலர் வறுமையில் இருக்கிறார்கள். என்னைப் போன்றோரை கௌரவப்படுத்தவில்லை என்றாலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டும் என அவர் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 6 புதிய நிறுவனங்கள் அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்

Intro:வறுமையில் வாடும் சுதந்திர போராட்ட தியாகி பற்றிய தொகுப்பு

Body:பெரம்பலூர் அருகே சுதந்திர போராட்ட தியாகி குடியிருக்க வீடு இன்றி வறுமையில் வாழ்ந்து வருகிறார் பெரம்பலூர் மாவட்டம் வரவு பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி வயது 93 சிறுவயதிலேயே தாய் நாட்டின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தவர் தனது குடும்ப வறுமை காரணமாக பிழைப்புத் தேடி சென்னைக்கு சென்றார் அங்கு உணவகத்தில் கூலிவேலை செய்து இருந்தாலும் தன் தாய்நாடு மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்த காரணத்தினால் தான் அகிம்சை வழியில் போராட மனம் இல்லாததால் தனது சொந்த கிராமத்தை சேர்ந்த ஒருவரின் உதவியோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில் தன்னை இணைத்துக்கொண்டார் பர்மாவில் 6 மாத கால பயிற்சி எடுத்துக் கொண்ட இவர் ஆங்கிலேயே படையினருடன் போரிட்டபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை தண்டனையும் பெற்றார் தாய் நாடு சுதந்திரம் பெறும் வரை நேதாஜி படையில் பணியாற்றி 1954 ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்கு வருகை தந்தபோது ரங்கசாமிக்கு ஊரே வரவேற்பு கொடுத்தது
அதே பகுதியைச் சேர்ந்த செல்லம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட ரங்கசாமிக்கு செல்ல பாப்பு அழகம்மாள் ஜோதி ஆகிய மூன்று பெண் குழந்தைகள் 93 வயதை கடந்த தியாகி ரங்கசாமி சுதந்திர தினம் குடியரசு தினம் உள்ளிட்ட அரசு விழாக்களில் தவறாமல் பங்கேற்கும் இவர் தனது சட்டையில் நேதாஜி புகைப்படத்துடன் கூடிய பூஜையை அணிந்து கொண்டு வலம் வருகிறார்
நாட்டிற்காக போராடிய போராட்ட தியாகி ரங்கசாமிக்கு தற்பொழுது குடியிருக்க வீடு இல்லாமல் தனது மாற்றுத்திறனாளி மகளுடன் பெரம்பலூரில் வசித்து வருகிறார் வீடு வாரிசுக்கு அரசுப்பணி வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இவரின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் செவிசாய்க்கவில்லை இதனால் வரவு கிராமத்தில் வாழ்ந்து வந்த குடிசை வீடு இடிந்து விழுந்து காணப்படுகிறது

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தியாகி ரங்கசாமியின் மனைவி உயிர் இழந்த பின்பு தன் குடியிருந்த வீட்டை பராமரிக்க பணம் இல்லாததால் இடிந்து தரைமட்டமாகி விட்டது என்றும் தான் குடியிருந்த வீட்டை கட்டி தர கோரி கடந்த 10 ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் தனது மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வேதனைப்பட தெரிவிக்கின்றார்

Conclusion:சுதந்திர போராட்ட தியாகி ரங்கசாமி தனக்கு மாநில அரசின் உதவித் தொகை மட்டுமே கிடைப்பதாகவும் மத்திய அரசின் உதவித் தொகை கிடைத்தால் வறுமையில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார் மேலும் குடியரசு தினம் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மட்டுமே என்னைப் போன்றோர் மற்றும் கௌரவிக்கப் படுகிறார்கள் எனவும் இதர நாட்களில் அரசு அதிகாரிகள் உட்பட யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலர் வருமை உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார் இருக்கும் கொஞ்ச நாள்களில் என்னைப் போன்றோர் கௌரவப்படுத்த வில்லை என்றாலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார் தியாகி ரங்கசாமி

பேட்டி போ ரெங்கசாமி சுதந்திர போராட்ட தியாகி வரகு பாடி
Last Updated : Jan 25, 2020, 11:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.