ETV Bharat / state

தேவசேனாக்களுக்கு காவலன் செயலி... பாகுபலியாக மாறிய பெரம்பலூர் காவல் துறை! - இணையத்தை கலக்கும் பெரம்பலூர் காவல்துறை

பெரம்பலூர்: தலைக்கவசம், காவலன் (SOS) செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினர், பொதுமக்களுக்கு சினிமா பட பாணியில் "மீம்ஸ்"களை வெளியிட்டுள்ளனர்.

memes
memes
author img

By

Published : Feb 18, 2020, 1:18 PM IST

எதை செய்தாலும் இந்த உலகமே நம்மை உற்றுப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் தான் இயந்திர உலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நல்லது, கெட்டது எது என்பதை பார்க்கும் வயதில்லை, அனைத்தையும் ட்ரெண்டாக்கும் காலம் இது. நடிகர்களுக்காக சமூக வலைதளங்களில் சண்டை போடும் ரசிகர்கள் மத்தியில், இதுபோன்ற நல்ல செய்திகளையும் ட்ரெண்டாக்கலாம் என்பதை பெரம்பலூர் காவல் துறை நிரூபித்துள்ளது.

காலத்திற்கேற்றார்போல் இளைஞர்களிடமும், மக்களிடமும் நல்ல கருத்தைக் கொண்டு சேர்க்க நகைச்சுவை உணர்வுடன் நல்ல கருத்துகளை மீம்ஸ் மூலம் வைரலாக்கி வருகிறது, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.

ராஜா ராணி பட கருத்து
ராஜா ராணி பட கருத்து

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பு, தலைக்கவசம், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவலன் SOS-செயலி செயல்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை 'காவலன் SOS-செயலி' குறித்த செய்தியை, சினிமா பட பாணியில் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

பாகுபலி பட வசன காட்சி
பாகுபலி பட வசனக் காட்சி

அதில், பாகுபலி பட வசனம், நடிகர் வடிவேல் பேசிய திரைப்பட வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த முயற்சியினை பெரம்பலூர் மாவட்ட காவல் துறை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

பாகுபலி பட வசனம்
பாகுபலி பட வசனம்

தற்போது பெரம்பலூர் இளைஞர்கள் மத்தியில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் மீம்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சில்லுனு ஒரு காதல் படகாமெடி
சில்லுனு ஒரு காதல் பட காமெடி

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - பாமக தீர்மானம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.