பெரம்பலூர் மாவட்டம் வேளாண் தொழிலை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும். இங்கு பருத்தி, மக்கா சோளம், சிறுதானியா வகைகள், சின்ன வெங்காயம் போன்றவை பெரும்பாலும் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஆலத்தூர் வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தாண்டு 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருகிறது.
ஆடிப்பட்டம், எதிர்வரும் புரட்டாசி பட்டத்திற்காக விவசாயிகள் நிலத்தை உழுது தயார்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் தற்போது விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், விதை வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது, விதை வெங்காயம் 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிமாநில விவசாயிகள் இங்கு வந்து விதை வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர். இதனால், இங்கிருக்கும் விவசாயிகளுக்கு விதை வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் அஞ்சத்தொடங்கியுள்ளனர். விதைப்பு பணிக்காக பட்டரை போட்டு பாதுகாக்கப்பட்ட சின்ன வெங்காயம் திருடு போகும் நிகழ்வு பெரம்பலூரில் அதிகரித்துள்ளது. இது விவசாயிகளை மிகுந்த வேதனை அடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் தொடரும் சின்ன வெங்காயம் திருட்டு - விவசாயிகள் வேதனை