பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறையினர் விலங்கு நல வாரியம் அலுவலர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, திருச்சி மாவட்டங்களிலிருந்து 450 ஜல்லிக்கட்டு காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை ஜல்லிக்கட்டு வீரர்கள் வீரத்துடன் அடக்கினர்.
மேலும், மாடுபிடி வீரர்களுக்கு அடங்காத காளைகள் களத்தில் நின்று வேடிக்கை காட்டிய விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி, தங்கம் நாணயங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு தொடரவிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார்