கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனிடையே, பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் மூர்த்தி என்பவரது காட்டில் நாட்டு கள்ளச்சாராயம் காய்ச்சியதாக செல்வகுமார், மயில்வாகனன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பியோடி விட்டார்.

இதையடுத்து, 280 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் வர்த்தகத்திற்கு மத்திய அரசு அனுமதி