ETV Bharat / state

சிறுமிக்குச் சூடுவைத்து சித்ரவதை: சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு - girl died of torture

பெரம்பலூர் அருகே உறவினர் வீட்டிலிருந்து பணத்தை எடுத்ததாகக் கூறி சிறுமிக்கு சூடு வைத்ததில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

perambalur girl died of torture
பெரம்பலூர் சிறுமி உயிரிழப்பு
author img

By

Published : Jan 10, 2022, 2:20 PM IST

பெரம்பலூர்: வேப்பந்தட்டை திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா - மணிமேகலை தம்பதியினர். இவர்களது மகள் மகாலட்சுமி (10). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்புப் படித்துவந்தார்.

இந்நிலையில், சிறுமி மகாலட்சுமி கடந்த ஆறாம் தேதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து 70 ரூபாயை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று செலவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தெரிந்த அவரது தாய் மணிமேகலையும் உறவினர் மல்லிகா என்பவரும் சேர்ந்து சிறுமியைத் துன்புறுத்திச் சூடுவைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மகாலட்சுமியை கொண்டுசென்றனர். அங்குப் பரிசோதித்து முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக சிறுமி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்குச் சிகிச்சைப் பெற்றுவந்த சிறுமி இன்று (ஜனவரி 10) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அரும்பாவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு சிறுமியின் உயிரிழப்பிற்கு காரணமான மணிமேகலை, மல்லிகா ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:பள்ளிகளைத் திறக்க வேண்டும் - தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.