ETV Bharat / state

சுதந்திர போராட்ட தியாகி ரெங்கசாமி காலமானார்

author img

By

Published : Sep 17, 2020, 6:07 AM IST

பெரம்பலூர்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்த சுதந்திர போராட்ட தியாகி ரெங்கசாமி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

தியாகி ரெங்கசாமி
தியாகி ரெங்கசாமி

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ரெங்கசாமி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஐஎன்ஏ எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பலரும் பணிபுரிந்தனர், இவர்களில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் வரகுபாடி கிராமத்தில் பிறந்த தியாகி ரெங்கசாமியும் ஒருவராவார்.

இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், மூன்று மகள்கள் உள்ளனர். வரகுபாடி கிராமத்தில் இவருக்கு தொகுப்பு வீடு கூட வழங்கப்படவில்லை. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள தனது முதல் மகளான செல்ல பாப்பு வீட்டில் வசித்து வந்தார். 2018ஆம் ஆண்டு கீழே விழுந்ததினால் நடக்க முடியாமல் அதன் பிறகு வீட்டிலேயே முடங்கி கிடந்தார். மாவட்ட நிர்வாகம் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மட்டுமே தியாகி ரெங்கசாமியை அழைத்து வந்து கவுரவித்தது.

தியாகி ரெங்கசாமி
தியாகி ரெங்கசாமி

காலமான தியாகி ரெங்கசாமியின் உடல் சொந்த ஊரான வரகுபாடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க:நாட்டுப்பற்று மக்களிடத்தில் ஊறவேண்டும் - சுதந்திரப் போராட்டத் தியாகி அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.