பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கூட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை,
- வறட்சி, தொடர் மழை, கரோனா எனப் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் விவசாயிகள் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட வயல்களை முழுமையான ஆய்வு செய்து அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்டு பயிர் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உடன் இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஆகும். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க...சாமானிய மக்களுக்கானது அல்ல, பெருநிறுவனங்களின் பட்ஜெட்- பினராயி விஜயன்!