ETV Bharat / state

கரும்பு அரவை பருவத்திற்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - perambalur farmers protest

பெரம்பலூர்: சர்க்கரை ஆலை 2015 முதல் 17 வரையிலான கரும்பு அரவை பருவத்திற்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

farmers protest  perambalur farmers protest  கரும்பு அரவை பருவத்திற்கான பாக்கி தொகையை தர விவசாயிகள் கோரிக்கை
கரும்பு அரவை பருவத்திற்கான பாக்கி தொகையை தர விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Dec 21, 2019, 4:45 PM IST

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 35ஆவது நினைவுநாளை முன்னிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அவருக்கு மாலை அணிவித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். 2015 முதல் 17 வரையிலான கரும்பு அரவை பருவத்திற்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிலுவை வைத்துள்ள தொகையை வழங்க வேண்டும். கரும்பு சர்க்கரை ஆலைக்கு நிரந்தர பணியாளர்கள் நியமிக்க வேண்டும். மேலும் சின்ன வெங்காயம் திருகல் நோய் பாதிப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்க! - மனிதநேய மக்கள் கட்சி புகார்

திருகல் நோய் பாதித்த சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தரமான நாட்டு சின்ன வெங்காயத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

கரும்பு அரவை பருவத்திற்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக இந்தியா முழுவதும் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கலந்துகொள்ளும் எனவும் பெரம்பலூரில் உள்ள கடவுச்சீட்டு மையத்தை முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Intro:பெரம்பலூர் சர்க்கரை ஆலை 2015 முதல் 17 வரையிலான கரும்பு அரவை பருவத்திற்கான பாக்கி தொகையை வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை

Body:பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 35வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அவருக்கு மாலை அணிவித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர் அதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர் 2015 முதல் 17 வரையிலான கரும்பு அரவை பருவத்திற்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிலுவை வைத்துள்ள பாக்கி தொகையை வழங்க வேண்டும் கரும்பு சர்க்கரை ஆலைக்கு நிரந்தர பணியாளர்கள் நியமிக்க வேண்டும் மேலும் சின்னவெங்காயம திரிகள் நோயால் பாதிப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் திருகல் நோய் பாதித்த சின்னவெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் தரமான நாட்டு சின்ன வெங்காயத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

Conclusion:ஜனவரி எட்டாம் தேதி நடைபெறும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக இந்தியா முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் கலந்து கொள்ளும் எனவும் பெரம்பலூரில் கடவுச்சீட்டு மையம் முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்தனர் இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

பேட்டி ராஜா சிதம்பரம் மாநிலச் செயலாளர் தமிழக விவசாயிகள் சங்கம்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.