ETV Bharat / state

கையூட்டு வாங்கிய மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கைது! - பெரம்பலூர் லஞ்ச புகாரில் மின் பொறியாளர் கைது

பெரம்பலூர்: மின் கம்பியை மாற்றியமைக்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

perambalur eb engineer arrested on getting bribe
லஞ்ச வாங்கிய புகாரில் மின்வாரிய பொறியாளர் கைது
author img

By

Published : Dec 27, 2019, 7:46 AM IST

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சரவணன் (40). இவரது வீட்டிற்கு அருகேயுள்ள மின் கம்பத்திலிருந்து செல்லும் மின் கம்பியானது மிகவும் தாழ்வாக செல்வதால் மின் விபத்து ஏற்படும் வாய்ப்பிருந்துள்ளது.

இதனால் மின் கம்பியை மாற்றியமைக்கக்கோரி பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் சரவணன் விண்ணப்பித்துள்ளார். ஆனால், மின் கம்பியை மாற்றியமைக்க மின் வாரியத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய பணியாளர்களிடம் சரவணன் கேட்டபோது, உதவி செயற்பொறியாளர் பரிந்துரை செய்தால் மட்டுமே மின் கம்பியை மாற்றியமைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து மின்வாரிய உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வரும் மாணிக்கத்தை அணுகியபோது, ஆயிரம் ரூபாய் கையூட்டு கொடுத்தால் மின் கம்பியை மாற்றியமைக்க பரிந்துரை செய்யவதாக அவர் தெரிவித்துள்ளார்.

லஞ்ச வாங்கிய புகாரில் மின்வாரிய பொறியாளர் கைது

ஆனால் கையூட்டு கொடுக்க விரும்பாத சரவணன், பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல் துறையினர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தனர்.

அப்போது, சரவணனிடம் இருந்து 1,000 ரூபாய் கையூட்டு வாங்கிய உதவி செயற்பொறியாளரை அவர்கள் கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் அலுவலகம், பெரம்பலூர் வெங்கடேசபுரத்திலுள்ள அவரது வீடுகள் ஆகிய இடங்களில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கிரி முன்னிலையில் மாணிக்கம் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படியுங்க:

லஞ்சம் வாங்கிய சார்பதிவாளருக்கு நான்கு ஆண்டுகள் சிற

Intro:

பெரம்பலூரில் மின் கம்பியை மாற்றியமைக்க ரூ. 1,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்Body:

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சரவணன் (40). இவர், தனது வீட்டின் அருகேயுள்ள மின் கம்பத்திலிருந்து செல்லும் மின் கம்பியானது மிகவும் தாழ்வாக செல்வதாலும், இதன் மூலம் மின் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் கருதி, மின் கம்பியை மாற்றியமைக்க கோரி பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் விண்ணப்பித்தாராம். ஆனால், மினஅ கம்பியை மாற்றி அமைக்க மின் வாரியத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய பணியாளர்களிடம் கேட்டபோது, உதவி செயற்பொறியாளர் பரிந்துரை செய்தால் மட்டுமே மின் கம்பியை மாற்றியமைக்க முடியும் என தெரிவித்தனராம். இதையடுத்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வரும் மாணிக்கத்தை (52) அணுகியபோது, ரூ. 1,000 லட்சம் கொடுத்தால் மின் கம்பியை மாற்றியமைக்க பரிந்துரை செய்யப்படும் என சரவணனிடம் தெரிவித்தாராம்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன் பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நின்றிருந்தனர். அப்போது, சரவணனிடம் இருந்து ரூ. 1,000 லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளரை மாணிக்கத்தை, மறைந்திருந்த போலீஸார் கையும், களவுமாக கைது செய்தனர்.
இதையடுத்து, உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள அவரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர்.Conclusion:.பின்னர், பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கிரி முன்னிலையில் ஆ]ர்படுத்தப்பட்ட மாணிக்கம் சிறையில் அடைக்கப்பட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.