ETV Bharat / state

பூலாம்பாடி அதிமுக நகரச் செயலாளர் பாலியல் புகாரில் கைது - பூலாம்பாடி அதிமுக நகர செயலாளர் பாலியல் புகாரில் கைது

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி அதிமுக நகரச் செயலாளர் வினோத், தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் வினோத் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பூலாம்பாடி அதிமுக நகர செயலாளர் பாலியல் புகாரில் கைது

author img

By

Published : Jan 20, 2022, 12:30 PM IST

பெரம்பலூர்: அரும்பாவூர் அருகே பூலாம்பாடி பேரூராட்சியின் அதிமுக நகரச் செயலாளராக இருப்பவர் வினோத் (48). இவர் மீது ஏற்கனவே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் மீது பூலாம்பாடியைச் சேர்ந்த பெண் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் பூலாம்பாடி அதிமுக நகரச் செயலாளர் வினோத் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துவந்ததாகவும், கத்தியைக் காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்க சொன்னதாகவும் சம்பந்தப்பட்ட பெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் நடத்திவரும் கம்பெனியை நடத்தவிட மாட்டேன் எனக் கூறியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் அரும்பாவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பூலாம்பாடி அதிமுக நகரச் செயலாளர் வினோத்தை இன்று (ஜனவரி 20) கைதுசெய்தனர். அவர் மீது கொலை முயற்சி, அத்துமீறி வழிமறித்து மிரட்டுதல் உள்பட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டுள்ள வினோத்தை சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகளைக் காவல் துறையினர் மேற்கொண்டுவருவதாகவும் கூறப்படுகிறது. பாலியல் புகாரில் அதிமுக நகரச் செயலாளர் கைதுசெய்யப்பட்டுள்ளது அதிமுகவினர், பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கர்ப்பமடைந்த மாணவி மரணம்: மறைத்த தலைமையாசிரியர், வார்டன் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.