பெரம்பலூர் நகர்ப்புற பகுதி முத்து நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் பாமகவின் பெரம்பலூர் நகர செயலாளராக இருந்து வருகிறார். இவ்வேளையில் ஒரு வாரத்திற்கு முன்பு கரோனா அறிகுறிகளுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் மேல் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார். இம்மாவட்டத்தில் ஏற்கனவே சித்த மருத்துவர் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். தற்பொழுது பாமக நகர செயலாளர் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்து உயிரிழந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
'பிளாஸ்மா தானம் கொடுக்க வருவோருக்கு அரசு சலுகைகள் தருக!' - வலுத்துவரும் கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 18 நிலவரப்படி தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக இருந்தது.
இதில் 168 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இச்சூழலில் பெரம்பலூர், திருச்சி மருத்துவமனைகளில் 35 பேர் தற்போதுவரை கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.