தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்கள் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு செய்தனர். பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பொறுத்தவரையில் பெரம்பலூர் மணச்சநல்லூர், முசிறி, துறையூர், லால்குடி, குளித்தலை, உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் இந்த ஆறு சட்டப்பேரவை தொகுதியிலிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டு, அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இந்த கல்லூரியில்தான் வாக்கு எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணிக்காக 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது