ETV Bharat / state

பெரம்பலூரில் 2 சட்டப்பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

பெரம்பலூர் : பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 5 லட்சத்து 60 ஆயிரத்து 690 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Perambalur Collector santha has released the final voter list of two constituencies
பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது!
author img

By

Published : Feb 14, 2020, 1:32 PM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தா இப்பட்டியலை வெளியிட்டார்.

Perambalur Collector santha has released the final voter list of two constituencies
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சாந்தா கூறுகையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 818 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 50 ஆயிரத்து 625 பெண் வாக்காளர்கள், 17 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 466 வாக்காளர்கள் உள்ளனர்.

அதேபோல் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 115 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 34 ஆயிரத்து 95 பெண் வாக்காளர்கள், 14 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 224 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 5 லட்சத்து 60 ஆயிரத்து 590 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 933 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 84 ஆயிரத்து 720 பெண் வாக்காளர்கள், 37 இதர வாக்காளர்கள் உள்ளனர்” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் உயர் அலுவலர் ராஜேந்திரன், ஆட்சியர் நேர்முக உதவியாளர் ராஜராஜன், அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கான பயிற்சி நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.