விவசாயத்தை முதன்மையாக கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 70-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.
இதனிடையே, பெரம்பலூரில் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தில் பெரிய ஏரி மற்றும் சின்ன ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளன. ஆனால், இந்த இரண்டு ஏரியை சுற்றி சிலர் ஆக்கிரமித்து உள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200 ஏக்கருக்கு மேலாக பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரியை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.