பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள கிராமத்தில் இன்று(டிச.11) காலை பட்டியல் இன சிறுவர்கள் 5 பேரை, அதே ஊரைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தை சேர்ந்த 5 க்கும் மேற்பட்ட நபர்கள் மலம் அள்ள வைத்ததாக கூறப்படுகின்றது. இதனைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில், பட்டியல் இன சிறுவர்களை மனிதக் கழிவை அள்ள வைத்து துன்புறுத்தியதாக, மூன்று பேர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : காவலரை தாக்கிய ஐந்து பேர் கைது!