கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் இருக்க மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட சிஐடியு சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ”58 நாட்களாக ஆட்டோ தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கியுள்ளனர். ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஷேர் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்க வேண்டும், தொழிலாளர் நல வாரியத்தில் ஒரு சில தொழிலாளர் மட்டுமே பதிவு செய்துள்ளதால், அவர்களுடன் சேர்த்து பிற தொழிலாளர்களுக்கும் அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரம் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வேளாண்மை லாபகரமான தொழிலாக மாற விரிவான வேளாண்மைக் கொள்கை தேவை!