பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் மணிகண்டன் என்பவர், அம்மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு அறுவை சிகிச்சை செய்ய தானாகவே முன்வந்து ரத்தம் கொடுத்துள்ளார். இவர் இதுவரை 24 முறை ரத்தம் கொடுத்து உதவியுள்ளார்.
மேலும், பெரம்பலூர் ஆயுதப்படை காவலர் தமிழ்ச்செல்வன் என்பவர் அம்மாவட்டத்தில் உள்ள சித்தளி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கு ரத்தம் வழங்கி உள்ளார். இவர் இதுவரை 47 முறை ரத்தம் கொடுத்து உதவி இருக்கிறார். ரத்த தானம் வழங்கிய ஆயுதப்படை காவலர்களுக்கு, காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரத்தம் இன்றித் தவிக்கும் ஜிப்மர் மருத்துவமனை!