பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மருதையாறு துறைமங்கலம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டானது கீழ கணவாய், செல்லியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உற்பத்தியாகும் மருதையாறு பெரம்பலூர் மாவட்டம் வழியாகச் சென்று அரியலூர் மாவட்டம் கொள்ளிடத்தில் வீணாக கலப்பதை தடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. கடந்த 1983ஆம் ஆண்டு பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூரில் அப்போதைய வருவாய் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராஜா முகமது ஆகியோரால் இந்த அணைக்ககான அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மழையால் இந்த அணைக்கட்டில் தேங்கும் தண்ணீரை நம்பியை அப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் இருக்கிறது. இந்த அணைக்கட்டு மூலம் விளாமுத்தூர் நொச்சியம் செல்லியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மருதையாறு துறைமங்கலம் அணைக்கட்டு பராமரிக்கப்படாததால் கால்வாய்கள் முட்புதர்களால் சூழ்ந்து காணப்படுகின்றன.
மேலும், மணல் திட்டுகள் உருவாகி மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் வீணாக கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் சூழல் நிலவி வருகிறது. இதற்காக சீரமைப்பு பணியை மேற்கொள்ள கோரி அப்பகுதியினர் பொதுப்பணித்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்கை காட்டி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: