ETV Bharat / state

கோவில் திருவிழா வேண்டி மனு அளித்த கிராம மக்கள்!

பெரம்பலூர்: பெருமத்தூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் இணைந்து நடத்துவதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Mass People
author img

By

Published : Aug 18, 2019, 8:21 AM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ளது பெருமத்தூர் கிராமம். இந்தக் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கட்டப்பட்ட மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழா அந்த கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்களால் பல ஆண்டுகளாக இணைந்து நடத்தப்பட்டது.

கோவில் திருவிழா
பெருமத்தூர் கிராம மக்கள்

இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிப்பதாகவும், இதனால் நடைபெறவிருக்கும் திருவிழாவில் இரு சமுதாயத்தினருக்கும் மோதல் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக அவர்கள் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவில் திருவிழா வேண்டி மனு

அனைத்து சமுதாய மக்களும் இணைந்து திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம், காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:பெரம்பலூர் அருகே திருவிழா நடத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அனுமதிக்க மறுப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Body:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பட்ட மாரியம்மன் திருக்கோவில் உள்ளது இத்திருக்கோவிலில் அதே ஊரில் இரு பிரிவினர் பல ஆண்டுகளாக இணைந்து திருவிழா நடத்தி வந்ததாகவும் இந்நிலையில் இந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்கள் சமுதாய மக்களை புறக்கணித்து தன்னிச்சையாக ஒரு பிரிவினர் மட்டும் திருவிழா நடத்த முயற்சிப்பதாகவும் மேலும் அந்த சமுதாய மக்கள் மூலம் தங்கள் பிரிவினரை இழிவுபடுத்தி பேசியதால் தங்கள் ஊரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதாலும் பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்

Conclusion:மேலும் இரண்டு பிரிவினர் மக்களையும் அழைத்து பேசி இணை ந்து திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர் பேட்டி குணசேகரன் மாநிலத் துணைத் தலைவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.