கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளி, கிருமி நாசினி உபயோகிப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணியாக பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, வணிக நிறுவனங்களில் தகுந்த இடைவெளியை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன் முன்னிலையில் வட்டார மருத்துவ அலுவலர் சூரியகுமார், சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் மளிகை கடைகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது முகக் கவசம் இல்லாமல் வந்த நபர்களுக்கு தலா 200 வீதம் 1800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறையினர் தகுந்த இடைவெளி, முகக் கவசம் அணிந்து வருவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.