பெரம்பலூர்: ஆலத்தூர் வட்டம் ஈச்சங்காடு மலையையொட்டி 4 ஏக்கர் பரப்பளவில் பில்லாளியான் என்னும் நீர்ப்பிடிப்பு குளம் இருந்துள்ளது. குளம் இருந்த பகுதியைச் சுற்றி விவசாயம் செய்த விவசாயிகள் குளத்தை ஆக்கிரமித்து குளத்தை மூடி சமப்படுத்தி பயிரிட்டு வந்ததாக தெரிகிறது.
ஆக்கிரமிப்பால் 4 ஏக்கராக இருந்த நீர்ப்பிடிப்பு குளம் 10 சென்ட் என்ற அளவில் குறைந்து போனது. இதனால் மலையில் இருந்து வரும் நீர் ஓடை வழியாக குளத்திற்கு வராமல் வீணாணதால் கவலை அடைந்த ஈச்சங்காடு பகுதி விவசாயிகள் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வந்தனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் குளம் இருக்கும் இடத்தை பார்வையிட்டு அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்பில் ஒரு பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டிருந்ததால் அந்தப் பகுதிக்கு மட்டும் அலுவலர்கள் 2 மாதம் அவகாசம் கொடுத்தனர். மற்ற பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
இதையும் படிங்க: குளம் ஆக்கிரமிப்பு - மீட்க கோரிக்கை