பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மங்குன் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. வேதியியல் பயின்றுவருகிறார். இதனிடையே மகாலட்சுமியின் சித்தப்பா ஆனந்த குமார் என்பவரிடம் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் ஓராண்டுகாலமாக கட்டட வேலை செய்துவருகிறார்.
இதனிடையே சுதாகர் மகாலட்சுமியின் மீது ஒருதலைக்காதலால் அடிக்கடி அவரை தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பாடாலூர் காவல் துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மகாலட்சுமி தரப்பில் சுதாகர் மீது புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆத்திரமடைந்த சுதாகர், அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று வீட்டிலிருந்த மகாலட்சுமியின் கழுத்து, கைகளில் தான் வைத்திருந்த கத்தியை வைத்து அறுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இந்நிலையில் காயங்களுடன் இருந்த மகாலட்சுமியை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து பாடாலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிக்க: வேலை பார்த்து வந்த கடையில் கைவரிசை: மேற்குவங்க இளைஞர் கைது