ETV Bharat / state

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு! - விபத்து செய்திகள்

பெரம்பலூர்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, தனியார் நிறுவன தொழிலாளி உயிரிழந்தார்.

பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
author img

By

Published : Apr 1, 2021, 8:20 AM IST

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகேயுள்ள பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், பெரம்பலூர் நாரணமங்கலம் பகுதியிலுள்ள எம்.ஆர்.எஃப். டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்ற அவர் வேலை முடிந்து நேற்றிரவு (மார்ச் 31) வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அவரது இருசக்கர வாகனம் பெரம்பலூர் நான்கு சாலை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதில் தலை நசுங்கி கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் காவல் துறையினர் விரைந்துவந்து கலியமூர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி, அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தைத் தேடிவருகின்றனர். மேலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆலங்குளத்தில் இடப் பிரச்னையில் ஒருவர் வெட்டி படுகொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.