ETV Bharat / state

467 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு! - சட்டப் பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன்

பெரம்பலூர்: பிகார், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 467 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வடமாநிலத் தொழிலாளர்கள்  பெரம்பலூரிலிருந்து 467 வடமாநிலத் தொழிலாளர்கள்அனுப்பி வைப்பு  Perambalur North Indian Workers returning to home town  North Indian Workers
North Indian Workers
author img

By

Published : May 20, 2020, 7:06 PM IST

கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடைபயணமாக தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர்.

தொடர் ஊரடங்கு காரணமாக வெளியூர்களில் சிக்கியவர்கள் கால்நடையாக சொந்த ஊர்களுக்குச் செல்வதை தவிர்க்க பேருந்து, ரயில் வசதி செய்து தர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து வடமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை விஜய கோபாலபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் பிகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 416 தொழிலாளர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனடிப்படியில், இன்று பேருந்துகள் மூலம் திருச்சி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் பிகாரைச் சேர்ந்த தொழிலாளர்களை அனுப்பிவைத்தார்.

சொந்த செல்லும் வடமாநிலத் தொழிலாளர்கள்

அதேபோல், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வடமாநில தொழிலாளர்கள் பேருந்து மூலம் சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து இன்று மட்டும் 467 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வடமாநிலத் தொழிலாளர்கள்  பெரம்பலூரிலிருந்து 467 வடமாநிலத் தொழிலாளர்கள்அனுப்பி வைப்பு  Perambalur North Indian Workers returning to home town  North Indian Workers  சத்துணவு  சத்துமாவு  குழந்தை வளர்ச்சித் திட்டம்  சட்டப் பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன்  MLA Tamilselvan
கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்துமாவு வழங்கும் சட்டப் பேரவை உறுப்பினர் தமிழ்செல்வன்

இதன் தொடர்ச்சியாக, இறையூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் 50 குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சத்துமாவு, மூட்டை, அரிசி உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருள்களை பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் வழங்கினார். இந்நிகழ்வில், கர்ப்பிணி தாய்மார்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'ஆகஸ்ட் 1ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கலாம்' - அரசுக்குப் பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.