மத்தியப் பிரதேசத்தில் தேசிய அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கு பெற்றது. இதனிடையே வயது வரம்பற்றோர் பிரிவு, 23 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு, மராட்டிய அணிகள் மோதியது. இந்த இரு போட்டியிலும் தமிழ்நாடு அணி தங்கப் பதக்கம் பெற்றது.
தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு பெருமைச் சேர்த்தவர்களில் பாலாஜி, மணிகண்டன் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். தங்கப்பதக்கம் வெற்றி பெற்ற இருவருக்கும் நண்பர்கள், உறவினர்கள், கல்லூரி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.