ETV Bharat / state

அண்ணாமலை விமர்சனத்தை பெரிதாக எடுத்து கொள்வதில்லை - அமைச்சர் சேகர்பாபு - மதுரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் அனைத்தும் விரைவாக முடிக்கப்பட்டு வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் குடமுழுக்கு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்வது, நெடும் பயணத்தின் பொழுது சில சில குறுக்கீடுகள் வருவதைப்போல என்று அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை எனஅமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை விமர்சனத்தை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை - அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : Jun 18, 2022, 10:17 AM IST

Updated : Jun 18, 2022, 10:31 AM IST

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். மதுரகாளியம்மன் கோயில் புனரமைப்பு பணிகளையும், குடமுழுக்கு பணிகளையும், மலையில் உள்ள பெரியசாமி மற்றும் செல்லியம்மன் கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்ட அமைச்சர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, "முதலமைச்சரின் அறிவுரையின்படி தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்றும், சிறு சிறு பிரச்சனைகள் என்றால் அதனை சரிசெய்ய வேண்டும்.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் புனரமைப்பு பணிகளையும், குடமுழுக்கு பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

இந்த உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோயிலை ஆய்வு செய்வதற்காக துறை சார்ந்த அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் ஆட்சியருடன் வந்துள்ளோம். அதன்படி மதுரகாளியம்மன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மலைப்பகுதியில் உள்ள பெரியசாமி கோயில், செல்லியம்மன் கோயில் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

பெரியசாமி கோயில் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட செல்லியம்மன் உள்ளிட்ட அனைத்து சிலைகளும் மீண்டும் நிறுவப்படும். பக்தர்கள் இந்த மலைக்கோயிலுக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக சாலை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும், பெரியசாமி கோயிலுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பெரியசாமி கோயிலுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரப்படும் என்றார்.

அண்ணாமலை விமர்சனத்தை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை - அமைச்சர் சேகர்பாபு

"யூடியூபர் கார்த்திக் கோபிநாத் இந்த கோயிலின் பெயரில் மோசடியாக நிதி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இது குறித்து எதுவும் கருத்து சொல்ல முடியாது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 2012ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்ட மதுரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் அனைத்தும் விரைவாக முடிக்கப்பட்டு வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்கள் குத்தகை பெறுவது தொடர்பாக வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு இதுவரையில் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் அளவீடு செய்து அதற்குரிய எல்லைக்கல் போடப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி குத்தகை பாக்கி வாடகை பாக்கி, பட்டா மாற்றம் உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளும் துரிதப்படுத்தபட்டுள்ளது. தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சி முறையாகவும் சரியாகவும் செயல்பட்டு வருகிறது. நாங்கள் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

பல ஆண்டுகளாகக் குடமுழுக்கு நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள கோயில்களின் திருப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். அண்ணாமலை விமர்சனம் செய்வது, நெடும் பயணத்தின் பொழுது சில சில குறுக்கீடுகள் வருவதைப்போலத் தான், இதனைப் பெரிதாக நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை.

திமுக அரசு மக்களின் மகிழ்ச்சி, பாதுகாப்பு நாட்டினுடைய வளர்ச்சி, கல்வி, வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றைச் சிந்தித்துச் செயல்படுகின்ற இந்த ஆட்சி. இந்த ஆட்சிக்கு அண்ணாமலை போன்றவர்களால் விமர்சனங்கள் வருவது சாதாரண விஷயம். அதனைப் பற்றி கவலைப்படாமல் எங்களுடைய பயணம் தொடரும்" என்றார்.

இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா, பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!

Last Updated : Jun 18, 2022, 10:31 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.