பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகின்றார். ராஜேந்திரனின் மனைவி தேவகி, அவரது தாய் சிவமாலை இருவரும் வீட்டைப் பூட்டி உள்ளே தூங்கிக் கொண்டிருந்த வேளையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், வீட்டின் பின்பக்கம் உள்ள இரண்டு கதவுகளை உடைத்து உள்ளே சென்று பீரோவிலிருந்த நகை, வெள்ளி பொருள்களைத் திருடிக்கொண்டிருந்தனர்.
அப்போது தூங்கிக்கொண்டிருந்த தேவகியும், சிவமாலையும் விழித்து சத்தம் கேட்ட இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது கொள்ளையர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது தேவகியும், சிவமாலையும் சத்தம் போட்டதையடுத்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து குன்னம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க... வீட்டின் கதவை உடைத்து 12 சவரன் நகை கொள்ளை - போலீசார் விசாரணை