ETV Bharat / state

தள்ளுவண்டிகளை சேதப்படுத்திய கும்பல் : நடவடிக்கை எடுக்கக்கோரி வியாபாரிகள் புகார் - பெரம்பலூர் மாவட்ட குற்றச் செய்திகள்

பெரம்பலூர் : தள்ளுவண்டிக் கடையை சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தள்ளு வண்டிகளை சேதப்படுத்திய கும்பல்
தள்ளு வண்டிகளை சேதப்படுத்திய கும்பல்
author img

By

Published : Nov 7, 2020, 2:27 PM IST

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை பகுதியிலிருந்து, புதிய பேருந்து நிலையம் வரை தள்ளுவண்டிகளில் பழங்கள், காய்கறிகள், கம்மங்கூல் உள்ளிட்ட வியாபாரங்களில் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

நேற்றிரவு (நவ.06) தள்ளுவண்டி வியாபாரிகள் வியாபாரத்தை, முடித்துவிட்டுச் சென்ற நிலையில், தொடர்ந்து இன்று (நவ.07) காலை வந்து பார்த்தபோது, பத்துக்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள் சேதப்படுத்தப்பட்டு, பெரம்பலூர், பாலக்கரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு போடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், இது குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தங்களது தள்ளுவண்டிகளை சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பத்துக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: சாலையோர வியாபாரிகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.