பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர், குடிக்காடு, நெய் குப்பை உள்ளிட்ட கிராமங்களில் மாடுகள் கழுத்து, உடல் பகுதியில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்ததன.
இதனையடுத்து பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய நான்கு ஒன்றியங்களில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகள் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மேலும் கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் சுரேஷ் கிறிஸ்டோபர் அறிவுறுத்தலின் பேரில், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் குணசேகரன், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் மும்மூர்த்தி ஆகியோர் தலைமையில் 37 அவசர கால குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மாவட்டம் முழுவதும் நோய் குறித்து விழிப்புணர்வும் தடுப்பூசி முகாமும் அவ்வப்போது நடைபெறுகிறது.