பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீ வெங்கட பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பாலக்கரையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், வெங்கடேசபுரம், கடைவீதி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு சென்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
இந்த மாரத்தான் போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.