ETV Bharat / state

திண்டுக்கல் to பெரம்பலூர் 200 கிமீ நடந்தே வந்தவர் - உணவு கொடுத்து மருத்துவமனையில் சேர்த்த போலீஸ் - perambalur covid-19 news

பெரம்பலூர் : திண்டுக்கல்லிலிருந்து நடந்தே பெரம்பலூர் வந்த நபருக்கு காவல் துறையினர் உணவளித்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

Dindigul
Dindigul
author img

By

Published : Apr 30, 2020, 8:16 AM IST

Updated : Apr 30, 2020, 12:06 PM IST

கரோனா ஊரடங்கால் திண்டுக்கல்லிலிருந்து நடந்தே வந்த நபரின் பசியினை போக்கிய காவல் ஆய்வாளர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஊரடங்கு காரணமாக அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டதால் சிலர் தங்களுடைய சொந்த ஊருக்கு நடந்தும், மிதிவண்டியிலும் சென்ற வண்ணம் உள்ளனர்.

அதேபோல், பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் அரும்பாவூர் காவல் ஆய்வாளர் கலா தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது அந்த வழியாக ஒரு நபர் களைப்புடன் நடந்து சென்றுகொண்டு இருந்ததைக் காவல் துறையினர் பார்த்தனர்.

பெரம்பலூர் காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படம்

தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், களைப்புடன் வந்த நபரின் பெயர் பாண்டியராஜன் என்றும் ஊரடங்கால் போக்குவரத்து இல்லாத காரணத்தால் திண்டுக்கல்லிலிருந்து பெரம்பலூருக்கு நடந்தே வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, பாண்டியராஜனுக்குக் காவல் ஆய்வாளர் கலா உணவு கொடுத்து பசியாற்றினார். மேலும், நடந்தே வந்ததில் அவருடைய உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க : 'ஓடுங்க... ஓடுங்க... கொடிய நோய் கரோனா உங்களைத் துரத்தி வருது!'

Last Updated : Apr 30, 2020, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.