ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கும் - மலேசியாவிற்கும் வேளாண்மை மூலம் உறவு பாலம்: துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி - மலேசியாவில் விவசாயம்

விவசாயம் சார்ந்து தமிழ்நாட்டிற்கும் - மலேசியாவிற்கும் உறவு பாலம் எப்படி ஏற்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக மலேசியா நாட்டு தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Perambalur
பெரம்பலூர்
author img

By

Published : Jul 31, 2023, 11:26 AM IST

தமிழ்நாட்டிற்கும் - மலேசியாவிற்கும் வேளாண்மை மூலம் உறவு பாலம்: துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

பெரம்பலூர்: பல்வேறு பணியின் காரணமாக தமிழ்நாடு வந்துள்ள மலேசியா அரசின், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் உள்ள தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் இல்லத்திற்கு வருகை தந்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பேசியது, "விவசாயம் சார்ந்த தமிழ்நாட்டிற்கும் - மலேசியாவிற்கும் இடையே ஒரு உறவு பாலத்தை அமைக்க வேண்டும். தற்போது மலேசியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் அதிகமாக விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலேசியா, இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதால், கோயம்புத்தூரில் உள்ள விவசாய அறிவியல் வேளாண் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு விவசாயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேச உள்ளோம். மேலும் மலேசியாவில் விவசாயத்திற்கு தேவையான தொழில் நுட்ப உத்திகளை சேகரிக்கவும் அதற்கான மூலப் பொருள்களை எடுத்துச் செல்வதற்காகவும் கலந்துரையாட செய்ய உள்ளோம்.

தற்போதுள்ள அரசாங்கம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஏறக்குறைய 60% உணவு விவசாய பொருட்களை மலேசியாவிற்கு இறக்குமதி செய்கிறோம். அதனை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம். மலேசிய அரசாங்கம் விவசாயத்தில் உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதனை கூட்டுறவு வழியாக நடக்க வேண்டும் என அரசாங்கத்தின் இலக்கு உள்ளதால், நாம் தொழில்நுட்பத்தை கற்றுகொள்ள வேண்டும்.

மலேசியாவில் அரிசி தற்போது உள்ளது, ஆனால் மாற்ற தானிய வகைகள் இல்லை. ஆகையால் அந்த பயிர் செய்வது சாத்தியமா?.. அப்படி இருந்தால் அதை எப்படி செய்வது? அதற்கான தானிய விதைகளை இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்வது எப்படி என்பது குறித்து ஆய்வு அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். மலேசியாவில் நிலப்பரப்பு, நீர் வளம் அதிகமாக இருந்த போதிலும் அங்கு உள்ள நிலத்தில் உள்ள மண்ணிற்கு ஏற்ற பயிர் என்ன விளைவிக்கலாம் என்ற தகவலை அளிக்க வேண்டும்.

அதற்கான ஒரு புரிந்துணர்வை மலேசிய இளம் விவசாயிகளுக்கு தெரிவிப்பதற்காக, தற்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பண்டைய கால பயிர் மற்றும் கலாச்சார உணவு பொருட்கள் பற்றி தெரிந்து கொண்டு அதனை எவ்வாறு விவசாய உற்பத்தி செய்வது குறித்து புரிந்துணர்வு தெரிந்து கொண்டு அரசு மூலமாக செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்கிறது.

மேலும் மலேசியாவில் தற்போது விவசாய வேலைக்காக ஆட்களை அமர்த்தலாம் என மலேசியா அரசு தெரிவித்துள்ளது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து விவசாயிகளை வரவேற்று வருகிறது. தொழில்நுட்பம் சரியாக இருந்து லாபம் சரியாக இருந்தால் மட்டுமே அதில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். மலேசியாவில் உள்ள விவசாயிகளிடம் ஆர்வம் உள்ளது. ஆனால் அவர்களுக்கு அனுபவம் இல்லை அதற்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 24 மணிநேரமும் மது விற்பனை; அரசு பேருந்து முழுவதும் விளம்பரம் - திமுக அரசை விமர்சித்த மாஜி அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.