கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பல்வேறு தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வெளி மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி வந்தவர்களையும் இந்த ஊரடங்கு முடக்கியுள்ளது.
இதனிடையே திருச்சியில் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கரோனா ஊரடங்கால் பிழைக்க வழி தெரியாமல் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடிவெடுத்து திருச்சியிலிருந்து பெரம்பலூர், ஆத்தூர், சேலம் வழியாக நடந்து செல்ல முடிவெடுத்து பெரம்பலூர் வழியாக நடந்தே செல்லும் நிகழ்வு நடந்துள்ளது.
மேலும் கைக்குழந்தையுடன் உயிர் பிழைக்க ஊர் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் கூலித்தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்டோர் இந்த ஊரடங்கு முடக்கத்தால் நடந்தே செல்கின்றனர். இதனிடையே நடந்து சென்ற கூலித்தொழிலாளி குடும்பத்திற்கு காவல்துறையினர் உணவு அளித்தனர்.
இதையும் படிங்க... 400 கிலோமீட்டர் நடந்தே சென்ற இளைஞர்